கொரோனா பாதிப்பு குறித்து செப்.23ம் தேதி 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி செப்.23 ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.

புதுடெல்லி:

நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். நாட்டில் மேலும் தொற்று பரவல் இன்னும் கட்டுப்படுத்த முடியாத சூழலில், தொற்று பாதிப்பு அதிகம் இருக்கும் 7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி வரும் செப்டம்பர் 23 ம் தேதி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளதாக பி.டி.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

டெல்லி, மராட்டியம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. நேற்று (சனிக்கிழமை) நிலவரப்படி இந்தியாவில் ஒரு நாள் பாதிப்பு 93 ஆயிரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது .மேலும் இந்தியாவில் மொத்த பாதிப்பு 53 லட்சத்தை கடந்துள்ள நிலையில், பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதற்கு முன்பாக கடந்த மாதம் பிரதமர் மோடி, சில மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது நாட்டில் உள்ள 10 மாநிலங்களில் தொற்று பரவலை கட்டுப்படுத்தினால், கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில் இந்தியா வெல்லும் என குறிப்பிட்டு இருந்தார்.

Exit mobile version