கடுமையான நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மத்திய நிலக்கரி மற்றும் மின்சாரத்துறை அமைச்சகங்கள் உடன் அவசர ஆலோசனை நடத்துகிறார்.
டெல்லி,
தலைநகர் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் நிலக்கரி பற்றாக்குறையை சந்தித்து வருவதால் மின்சார தேவை பெருமளவில் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. மத்திய நிலக்கரித் துறை அமைச்சகத்தின் தகவலின்படி தற்போது கையிருப்பில் உள்ள நிலக்கரியை அடுத்த நான்கு நாட்களுக்கு மட்டுமே மின்சாரம் தயாரிப்பதற்கு போதுமானதாக இருக்கும் என கூறியிருந்தது. எனினும் மின் பற்றாக்குறை ஏற்படும் அளவிற்கு பாதிப்பு இல்லை என தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் அவசர ஆலோசனையானது நடைபெறுகிறது.
மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மத்திய மின் துறை அமைச்சர் ஆர் கே சிங் மற்றும் முக்கிய அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.தற்பொழுது கையிருப்பில் உள்ள நிலக்கரியின் அளவு நிலக்கரி பற்றாக்குறையினால் ஏற்படும் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.