16 வயது சிறுமியை சொந்த அண்ணியே பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பரிதாபம்…

ஆந்திராவில் 9 பேர் மாறி மாறி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய 16 வயது சிறுமியை போலீஸார் மீட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் 16 வயது சிறுமியை வலுகட்டாயமாக பாலியல் தொழிலுக்கு சிலர் உட்படுத்தப்படுகிறார்கள் என போலீஸாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதன்படி குறிப்பிட்ட வீட்டை போலீஸார் சோதனையிட்டிருக்கின்றனர். அங்கு அந்தப் சிறுமி மிகவும் மோசமான நிலையில் மீட்கப்பட்டிருக்கிறார். அவரை விசாரித்ததில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளதாக ஆங்கில பத்திரிக்கை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அந்தப் பெண்ணை சொந்த அண்ணனின் மனைவியே ரூ.27,000க்கு வேறொரு பெண்ணிடம் விற்றிருக்கிறார். அந்த பெண், சிறுமியை பாலியல் தொழில் செய்ய கட்டாயப்படுத்தியுள்ளார். இதுகுறித்து ஜூலை 18ஆம் தேதியே போலீஸாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதன்படி சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு பிரகாசம் மாவட்டத்தில் பதுங்கியிருந்த 9 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், அவரை பணத்திற்கு விற்பனை செய்த சிறுமியின் அண்ணியையும், பணத்திற்கு வாங்கிய பெண் உட்பட இதுவரை 11 பேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

இவர்கள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், மீட்கப்பட்ட சிறுமி மறுவாழ்வு சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version