நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கை!!

கடந்த 24 மணி நேரத்தில் 805 பேர் கொரோனா தொற்றால் பலி.

டெல்லி, கொரோனா பெருந்தொற்று தினசரி பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 14,348 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 13,198 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டில் நேற்று ஒரே நாளில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 805 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுவரை 3,42,46,157 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதில் 3,36,27,632 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும், இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் 4,57,191 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனை தவிர நாட்டில் இப்போது வரை 1,61,334 பேர் வரை கொரோனா தொற்றுக்கான சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதிப்பு,இறப்பு என்ற எண்ணிக்கையை தாண்டி சற்றே ஆறுதல் அளிக்கும் வகையில் இந்தியாவில் இதுவரை 1,04,82,00,966 டோஸ் தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version