உதவிக்கு யாரும் இல்லாமல் இறந்த முதியவரின் சடலத்தை தோளில் சுமந்த பெண் எஸ்.ஐ : குவியும் பாராட்டுகள்

ஆந்திர பிரதேசத்தில் உதவிக்கு யாரும் இல்லாமல் இறந்த முதியவரின் சடலத்தை தோளில் சுமந்து சென்று இறுதி மரியாதை செய்த எஸ்.ஐ க்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

ஆந்திரா :

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் அதிவிக்கொத்துரு கிராமத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக காசிபக்கா காவல் நிலையத்துக்கு நேற்று (பிப்.1) தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த இடத்திற்கு சென்ற பெண் உதவி ஆய்வாளர் கொட்டுரு சிரிஷா, முதியவரின் சடலத்தை பார்வையிட்டபோது, அந்த சடலம் அழுகி துர்நாற்றம் வீச தொடங்கி இருந்தது. முதியவர் குறித்து விசாரிக்கையில் அவர் ஒரு வழிப்போக்கர் என்று மட்டுமே தெரிந்துள்ளது.

இந்தநிலையில், லலிதா சேரிட்டபிள் டிரஸ்ட் தொண்டு நிறுவனத்துக்கு சிரிஷா இறந்த முதியவருக்கு இறுதி மரியாதை செய்ய உதவி கேட்டார் . முதியவரின் சடலம் இருந்த இடத்திற்கும், காவல் துறை வாகனத்திற்கு சுமாராக ஒரு 1 கிலோமீட்டர் தூரம் இருந்ததால் அவரை தூக்கி செல்ல கிராம மக்களிடம் உதவி கேட்டபோது யாரும் முன்வரவில்லை.

இதனால் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஒருவருடன் பெண் உதவி ஆய்வாளர் சிரிஷா சடலத்தைச் சுமந்து சென்று, இறுதி மரியாதை செய்வதற்காக தனது சொந்த பணத்திலிருந்து சிறிது தொகை அளித்தும் உதவி செய்துள்ளார்.

Read more – பிரசவ வலியால் துடித்த இளம்பெண் : ராணுவ வாகனத்தில் நடந்த சுகப்பிரசவம்

காவல் பெண் அதிகாரியின் இந்த செயலை பலரும் பாராட்டி வரும் வேளையில், சிரிஷா அந்த முதியவரின் உடலை தூக்கி செல்லும் வீடியோவை ஆந்திர போலீசார் தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்து பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

Exit mobile version