மத்திய அரசின் வெத்துவேட்டு உபதேசம் வேலைக்கு ஆகாது !!

தற்சார்பு இந்தியா என்ற பெயரில் நாம் வெத்துவேட்டு உபதேசம்  மட்டுமே செய்து வருகிறோம்.ஆனால்,ரஷ்யா உலகிற்கே குரோனா  தடுப்பு மருந்தை கண்டுபிடித்து  தற்சார்பு பாடம் புகட்டி உள்ளது என்றுசிவசேனா கட்சி மத்திய அரசின் மீது விமர்சனத்தை  தெரிவித்துள்ளது.

சாம்னா சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடு ஆகும் அதில் அந்த கட்சியின் மூத்த தலைவரும் தம்பியுமான சஞ்சய் ராவத் வாரம் தோறும் சிறப்பு கட்டுரை எழுதி  வருகிறார் அவர் இந்த வாரம் எழுதப்பட்டுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது

 சூப்பர் பவர் என்றால் என்ன என்பதற்கு ரஷ்ய நாடு ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறது ஆனால் நம் அரசியல் தலைவர்கள் யாரும் அதனை பின்பற்ற மாட்டார்கள் அதற்கு காரணம் அவர்கள் அமெரிக்கா மீது பேரன்பு கொண்டவர்களாக உள்ளார்கள்.

 உள்நாட்டிலேயே  கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்த ரஷ்யா அதை உற்பத்தி செய்யவும் தொடங்கிவிட்டது. ரஷ்ய அதிபர் புதின்  கடந்தவாரம் உலகத்திலேயே  முதன்முதலாக நோய்க்கான தடுப்பு மருந்து தங்களின் அரசு கண்டுபிடித்ததாக செய்தி வெளியிட்டிருந்தார் அது தடுப்புமருந்து மட்டுமல்லாமல் நிலையான நோய் எதிர்ப்பு சக்தியாகவும் விளங்கும் என்று அவர் தெரிவித்திருந்தார் .இதற்கெல்லாம் மேலே அவர்கள் நாட்டு மக்கள் நம்பவேண்டும்  என்றும்  நாம் கண்டுபிடித்த தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்று தெரிவிக்கும் வகையில்   தனது மகளின் உடலிலேயே  தடுப்பு மருந்துகளை செலுத்தினார்  இதன் மூலம் தற்சார்பு என்றால் என்னவென்று உலகிற்கே படம் எடுத்துள்ளது ரஷ்யா நாம் தற்சார்பு பற்றி வெத்துவேட்டு  உபதேசங்கள் மட்டுமே இன்றுவரை செய்து கொண்டிருக்கிறோம்.

ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் மகந்த் நிர்த்தயா தாஸ்   தற்போது  கொரோனா தொற்றுநோயால்பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால்,அதே ராமர் கோயில் அடிக்கல் நாட்டுவிழாவில்  அவருடன் பங்கேற்று, நிர்த்தயா தாஸுன் கைகளை இறுகப் பற்றி கைகுலுக்கிய பிரதமர் மோடி  தன்னை இன்றுவரை தனிமைப் படுத்திக் கொள்ளவில்லை .

 இதேபோல் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கொரோனாவில் மோசமான நிலையில் உயிருக்கு போராடிசிகிச்சை பெற்றுக் கொண்டு வருகிறார் வருகிறார்.  மற்றும்மத்திய அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள்  ஆகியோர் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

 நம் நாட்டில் வேலைவாய்ப்பு இல்லாதவர்கள் அளவு 14 கோடியாக  உயர்ந்துள்ளது..  ஆனால் தற்போது நாட்டை ஆட்சி  செய்பவர்கள் எந்த பணியும் மேற்கொள்வதில்லை இல்லை.  அவர்களின்கட்சிகளின் போராட்டங்கள் இல்லாததால், அவர்கள் சார்ந்த கட்சித் தொண்டர்கள்  மிகவும்சோம்பேறியாகிவிட்டார்கள்.

எதிர்க்கட்சியினரும் முழுமையாக அடங்கிவிட்டார்கள்.  தற்போது டெல்லியில் எந்தவிதமான அரசியல் கூட்டமும்,  நிகழ்வுகளும் இல்லை. சுதந்திரதின நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளும்  கூட அந்த அளவுக்கு  தீவிரமாக இல்லை.  ஏனென்றால் மும்பையைப் போல் டெல்லியிலும்  கரோனா அச்சம்  ஏற்பட்டிருந்தது  இவ்வாறு ராவத் அவருடைய கட்டுரையில்  குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version