ஸ்மார்ட் கன் கொண்டு காற்றின் தூசுகளை கட்டுப்படுத்த டெல்லி அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
டெல்லி, உலக அளவில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களில் டெல்லியும் ஒன்று; தீபாவளி பண்டிக்குக்கு முன்னதாக பயிர் கழிவுகளால் ஏற்படும் காற்று மாசுபாடும் தீபாவளிக்கு பின்னர் பட்டாசுகளால் ஏற்படும் காற்று மாசும் அடர்பனி காரணமாக நகரை சூழந்து காணப்படுகிறது.
இந்நிலையில், நேற்றைய தினம் தீபாவளி பண்டிகை கொண்டப்பட்டதான் காரணமாக டெல்லியின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் அபாயகரமான நிலைக்கு சென்றுள்ளது. 0-50 என்ற நிலையே சுவாசிக்க தகுந்த காற்றின் அளவு, ஆனால் டெல்லியில் பல்வேறு இடங்களில் 500 என்ற அளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக டெல்லியில் பல்வேறு இடங்களில் மக்களுக்கு கண் எரிச்சல் மற்றும் இருமல் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் காற்றில் கலந்துள்ள பார்ட்டிகள்ஸ் எனப்படும் நுண்துகளை கட்டுப்படுத்த சுமோக் கன் கொண்டு காற்றில் ஈரப்பதத்தை அதிகரித்து காற்றில் உள்ள தூசுகளை கட்டுப்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே இவை டெல்லியில் செயல்பாட்டில் உள்ளதாகவும், ஆனால் காலை மாலை என நெரிசல் அதிகம் உள்ள நேரங்களில் மட்டுமே இயக்கப்பட்டு வந்ததாகவும் இப்போது காற்றின் தரம் மோசமடைந்து உள்ளதால் முழு நேரம் இயந்திரங்களை இயக்க டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.
இவற்றின் மூலம் ஓரளவுக்கு மட்டுமே காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த முடியும் என்பதால் பொதுமக்கள் பெரும்பாலும் காற்று மாசு ஏற்படும் வகையில் பணிகளை செய்ய வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
டெல்லி மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் தகவலின் படி டெல்லியில் நிலவும் காற்று மாசு நவம்பர் 7ம் தேதி முதல் படிப்படியாக குறையும் என தெரிவித்து உள்ளனர். இருப்பினும், விவசாயிகள் அண்டை மாநிலங்களில் தொடர்ச்சியக பயிர் கழிவுகளை எரிப்பதல் இதே நிலைமை நீடிக்கும் என அச்சப்படுகிறது.
