நாளை நடக்கும் விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்திற்கு தெலுங்கானா ஆதரவு அளிக்கும் :சந்திரசேகர ராவ்

நாளை நடைபெற இருக்கும் விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்திற்கு தெலுங்கானா ஆதரவு அளிக்கும் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா:

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் மசோதாக்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் 12 வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.இதனை தொடர்ந்து நாடு முழுவது நாளை முழுஅடைப்பு போராட்டத்திற்கு டெல்லியில் போராடும் விவசாயிகள் அழைப்பு விடுத்து இருந்தனர்.இதற்கு ஆதரவாக தமிழகத்தில் திமுக போன்ற கட்சிகளும்,டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சிகளும் ஆதரவு அளித்து பாரத் பந்த் என்ற முழுஅடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

தற்போது தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்வும் விவசாயிகள் நாளை நடத்த உள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு தெலுங்கானா அரசு ஆதரவு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:மத்திய அரசு கொண்டு வந்த சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் போராடுவது நியாயமான போராட்டம் டான்.இதற்கு எங்கள் ஆதரவு நிச்சயம் இருக்கும்.விவசாயிகளின் நலனை பழிவாங்கும் விதமாக மத்திய அரசு கொண்டு வந்த சட்டங்கள் இருப்பதால் பாராளுமன்றத்தில் விவசாய மசோதாவை எங்கள் கட்சி எதிர்த்து வந்தது.புதிய விவசாய சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட வேண்டிய அவசியம் இருப்பதால் விவசாயிகளின் போராட்டத்தில் நேரடியாக ஈடுபட்டு போராட்டத்தை வெற்றிபெற செய்வோம். எங்கள் கட்சி தொண்டர்கள் நேரடியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த போராட்டத்தில் முதல்வர் சந்திரசேகரராவின் மகனும், அம்மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சரான தாரக ராமாராவ்,அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் நெடுஞ்சாலைகளில் தர்ணா போராட்டம் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version