பயங்கரவாதிகள் தாக்குதல் – 3 இந்திய வீரர்கள் உயிரிழப்பு

மணிப்பூர், மியான்மர் எல்லை அருகே , உள்ளூர் தீவிரவாத குழுவால் நடத்தப்பட்ட தாக்குதலில், இந்திய வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

மியான்மர் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 3 இந்திய வீரர்கள், உள்ளூர் தீவிரவாத குழுவால் நடத்தப்பட்ட கண்ணிவெடி தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததாக தகவல்.

மணிப்பூர் மாநிலம் சந்தல் மாவட்டத்தில் மியான்மர் எல்லையை ஒட்டிய பகுதியில் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் ரோந்து சென்றனர். அப்போது பயங்கரவாதிகள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் வீரர்களின் வாகனம் சிக்கியது. 

இந்த திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த வீரர்கள் சுதாரிப்பதற்குள், அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில், 3 வீரர்கள் உயிரிழந்தனர். 4 பேர் பலத்த காயமடைந்தனர். 

Exit mobile version