மேற்கு வங்கத்தில் 45 தொகுதிகளுக்கான 5 கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.
தமிழகம், பாண்டிச்சேரி, கேரளா, அசாம் போன்ற மாநிலங்களுக்கு ஏற்கனவே சட்டமன்ற தேர்தல் நடந்து முடித்தநிலையில் மேற்கு வங்கத்தில் தொடர்ந்து 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 294 தொகுதிகள் கொண்ட மேற்குவங்கத்தில் 4 கட்டங்களாக 135 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடித்துள்ளது.
இந்தநிலையில், 45 தொகுதிகளுக்கான 5 கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. இந்த தொகுதியில் சுமார் 324 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியிட்டுள்ளனர்.
Read more – வேளச்சேரி 92 ம் எண் வாக்குச்சாவடியில் விறுவிறுப்பான மறுவாக்குப்பதிவு…
ஏற்கனவே, கடந்த 4 ம் கட்ட தேர்தலின்போது நடைபெற்ற வன்முறையில் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு படையினர் குவிந்துள்ளனர். மேலும், 3 கட்ட தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில் இதுகுறித்து தேர்தல் ஆணையம் தற்போது ஆலோசித்து வருகிறது.