வெற்றி பெறுவோம் அல்லது உயிரை விடுவோம் என்ற பதாகையுடன் விவசாயிகள் : மத்திய அரசுடன் நடந்த 8 ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி

டெல்லியில் போராடி வரம் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 8 ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

புதுடெல்லி:

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் கடும் குளிர் மற்றும் மழைக்கு இடையில் கடந்த நவம்பர் மாதம் 26 ம் தேதி முதல் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். ஏற்கனவே நடந்த 7 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்த நிலையில் நேற்று 8 ம் கட்ட பேச்சுவார்த்தை விக்யான் பவனில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் முன்னிலையில் நடைபெற்றது.

“வெற்றி பெறுவோம் அல்லது உயிரை விடுவோம்” என்ற வாசகம் அடங்கிய பதாகையுடன் விவசாயிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து 3 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் விவசாயிகள் 3 வேளாண் மசோதாக்களையும் ரத்து செய்யக்கோரி வலியுறுத்த, மத்திய அரசு அதை ஏற்க மறுத்தது. இந்த நிலையில் 8 ம் கட்ட பேச்சுவார்த்தை எந்த ஒரு தீர்வையும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது . 15 ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Read more – ஒரே மேடையில் 2 பெண்களை மணந்த காதல் மன்னன் : இணையத்தில் பொங்கும் 90’s கிட்ஸ்கள்

இதனையடுத்து, விவசாய அமைப்பினர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெரும் வரை டெல்லி நடைபெறும் இந்த போராட்டம் தொடரும் எனவும், விவசாயிகள் திட்டமிட்டபடி குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நாடாகும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version