விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரம்; நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம்!!

நாடு முழுவதும் இன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது-விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்ட விவகாரத்தில் மத்திய இணை அமைச்சர் பதவி விலக வலியுறுத்தல்.

டெல்லி,
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த 3ம் தேதி விவசாயிகள் மீது உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கார் ஏற்றி கொலை செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதில் விவசாயிகள் 4 பேர் என மொத்த 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்த வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், லக்கிம்பூர் படுகொலை சம்பவத்தை கண்டித்து இன்று நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் அமைப்பு தெரிவித்துள்ளனர்.

காலை 10 மணி முதல் 4 மணி வரை போராட்டம் நடைபெறும் எனவும் ரயில்வே சொத்துக்களுக்கு எந்தவித சேதமும் ஏற்படாது என அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 26ஆம் தேதி லக்னோவில் மகாபஞ்சாயத்து நடத்தவுள்ளோம் என்றும் உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவும், அவரது மகன் ஆஷிஷ் மிஸ்ராவும் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இவை திட்டமிடப்பட்ட கொலை என்பதால், சதிச் செயலுக்கு காரணமான அஜய் மிஸ்ராவை அரசாங்க பொறுப்பில் ( இணை அமைச்சர் ) இருந்து நீக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Exit mobile version