வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது, இது குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்
புதுடெல்லி:
வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேறியது.கடனை திரும்ப செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதை சிறிது நாட்கள் ஒத்தி வைப்பதற்கான திருத்தம் கொண்டுவரப்பட்டது.
இதற்கு முன்பாக வங்கி திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதால் தொழில் நிறுவனங்ககளின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு வங்கி திவால் சட்டத்தில் கீழ் நடவடிக்கை எடுக்க விலக்கு அளிக்கும் வகையில் கடன் நெருக்கடி மற்றும் வங்கி திவால் சட்டம் 2020 ல் திருத்தம் செய்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த அவசரச் சட்டம் தொடர்பான சட்டத் திருத்த மசோதாவை மாநிலங்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அடுத்த 6 மாதங்கள் அல்லது அதற்கும் மேல் நீட்டிக்கப்படும் வரை இந்த காலகட்டத்தில் கடனை திருப்பி செலுத்தாத நிறுவனங்கள் மீது தற்காலிகமாக இந்த மசோதா மூலம் நடவடிக்கை எடுக்க விலக்கு அளிக்கப்பட்டது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.