காதலியை கொன்று வீட்டில் சுவற்றில் மறைத்து பூசிய காதலன் : 3 மாதங்களுக்கு பிறகு உடல் மீட்பு

மகாராஷ்டிராவில் கான்க்ரீட் சுவற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணின் உடல் 3 மாதங்களுக்கு பிறகு மீட்கப்பட்டது.

மகாராஷ்டிரா :

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் 30 வயதான இளைஞரும், 32 வயதான ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரிய வந்து எதிர்ப்பு தெரிவித்தநிலையில், அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்துள்ளனர். சிறிது நாட்களுக்கு பிறகு அந்த பெண் திருமணம் செய்து கொள்ளுமாறு காதலனை வற்புறுத்தியபோது, திருமணத்தில் ஆர்வம் காட்டாத அந்த நபர், திருமணம் செய்து கொள்ளாமலே சேர்ந்து வாழலாம் என்று முரண்டு பிடித்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு வந்துள்ளது.

Read more – அரசு மருத்துவமனையில் தொடரும் அலட்சியம் : அறுவை சிகிச்சை வார்ட்டில் ஓய்வு எடுக்கும் நாய்

இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருவருக்குமிடையில் வழக்கம்போல் தகராறு ஏற்பட்டு அப்போது ஆவேசமடைந்த அந்த இளைஞர் காதலியை அடித்து கொன்றுள்ளார். பின்னர் அந்த பெண்ணின் உடலை தாங்கள் வாழ்ந்து வந்த வீட்டின் குளியலறையில் உள்ள சுவற்றுக்குள் கான்க்ரீட் வைத்து பூசியுள்ளார்.வெகு நாட்களாக அந்த பெண் குடும்பத்தினருடன் தொடர்பில் இல்லாததால் சந்தேகமடைந்து அந்த இளைஞர் வீட்டிற்கு சென்று விசாரித்தபோது, தெளிவான பதில் எதுவும் அவர் அளிக்காததால் பெண்ணின் குடும்பத்தினர் காவல் துறையினருக்கு புகார் அளித்தனர்.

போலீசார் அந்த காதலன் வீட்டை சோதனையிட்டபோது வீட்டின் குளியலறையில் புதிதாக சிமெண்ட் பூசியுள்ளதை கண்டு சந்தேகப்பட்டு அதை இடித்து பார்த்தபோது உள்ளே அப்பெண்ணின் உடலை எலும்புக்கூடாக மீட்டெடுத்துள்ளனர் . இதையடுத்து காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து அந்த இளைஞரை சிறையில் அடைந்துள்ளனர்.

Exit mobile version