கொரோனாவின் ருத்ர தாண்டவம்.. பலியான உயிர்களின் எண்ணிக்கை… வெளியான அதிர்ச்சிகர புகைப்படம்

டெல்லி இடுகாட்டில் ஒன்றில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை எரியூட்டும் காட்சி மனதை கசக்கியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 முதல் பல கோடி உயிர்கள் பலியாகி உள்ளது. அதேபோல், இந்தியாவில் ஒரேநாளில் இந்த கொடூர கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது.

அதிலும் குறிப்பாக மகாராஷ்டிரா போன்ற வட மாநிலங்களில் கொரோனா தொற்றின் விளைவால் ஒரு நாளில் 60 ஆயிரம் நபர்களும், டெல்லியில் 25 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் இம்மாநிலங்களில் மருத்துவமனைகளில் இட பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை போன்ற முக்கிய காரணங்களால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

Read more – தீடிரென ஒத்திவைக்கப்பட்ட ஒடிசா சட்டசபை இடைத்தேர்தல்… இதுதான் காரணமா ?

தொடர்ந்து, தமிழகம், கேரளா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்களிலும் இதன் தாக்கம் வேகமெடுக்கும் நிலையில், டெல்லியில் கடந்த ஏப்ரல் 20 ம் தேதி நிலவரப்படி ஒரேநாளில் 23, 686 பேர் பாதிக்கப்பட்டு, 240 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்ட புகைப்படம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில், டெல்லியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள், ஒட்டுமொத்தமாக இடுகாட்டில் எரியூட்டும் காட்சி வெளியானது பலரது மனதையும் உலுக்கியுள்ளது.

Exit mobile version