காஷ்மீரில் உறைபனியில் கர்ப்பிணியை சுமந்து சென்ற ராணுவ வீரர்கள் : மத்திய சுற்றுச்சூழல் துறை வீடியோ வெளியீடு

காஷ்மீரில் உறைபனியில் கர்ப்பிணியை சுமந்து சென்ற ராணுவ வீரர்களின் வீடியோவை மத்திய சுற்றுச்சூழல்துறை வெளியிட்டுள்ளது.

காஷ்மீர் :

வடக்கு காஷ்மீரின் குப்வாரா பகுதியில் நிறைமாத கர்ப்பிணியான ஷப்னம் பேகத்திற்கு பிரசவ வலி ஏற்பட்டது. அந்த பெண்ணின் வீட்டில் இருந்து ஆரம்ப சுகாதார நிலையம் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. பனி மூடிய சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் கர்ப்பிணியின் உறவினர்கள் செய்வதறியாது நின்றனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த இந்திய ராணுவ வீரர்கள் ஷப்னம் பேகத்தை கட்டிலில் படுக்க வைத்து முழங்கால் அளவு பனியில் சுமந்து சென்றனர். சுமார் 4 மணி நேரம் உறை பனியில் கால் புதைந்து நடந்த ராணுவ வீரர்கள், ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணியை சேர்த்தனர். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

Read more – குடித்து விட்டு குத்தாட்டம் போட்ட சூர்யாபட நடிகை அபர்ணா : வைரலாகும் வீடியோ காட்சி..!!

கர்ப்பிணியை ராணுவ வீரர்கள் சுமந்து செல்லும் வீடியோவை மத்திய சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்றம், தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

Exit mobile version