மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கு சேர விரும்பும் மாணவர்களுக்கு நுழைவு தேர்வு நடத்த மத்திய கல்வித்துறை அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது.
நாடுமுழுவதும் இருக்கும் 41 மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கு சேர விரும்பும் 12 ம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு நுழைவு தேர்வு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சகத்துக்கு பல்கலைக்கழக மானியக் குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
அதில், வரும் கல்வியாண்டு முதல் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கு CUCET எனப்படும் நுழைவுத் தேர்வை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் எனவும், ஆண்டுக்கு இரண்டு முறை நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும் எனவும் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த கல்வியாண்டிற்கான முதல் நுழைவுத் தேர்வு வரும் ஜூன் மாத இறுதிக்குள் நடத்தப்பட்டு, முடிவுகள் ஜூலை மாதத்தில் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Read more – எம். பி.யை கண்டா வர சொல்லுங்க என்று முகப்புத்தகத்தில் கதறிய நபர்… நேரில் தரிசனம் கொடுத்த தென்காசி எம். பி.
மேலும், மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை மற்றும் பி.எச்.டி படிப்புகளுக்கு உயர்தர திறனாய்வு சோதனை நடத்தவும் திட்டமிட்டு வருகின்றனர். இதுதொடர்பாக இந்த மாத இறுதியில் அறிவிப்பு வெளியாகும் என்று ல்கலைக்கழக மானியக் குழு தரப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது. அனைத்திற்கு நுழைவு தேர்வு என்று ஒன்று இருந்தால் எதற்கு 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.