பொதுக்கூட்ட மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போது குஜராத் மாநில முதலமைச்சர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குஜராத் மாநிலம் வதோதரா உள்ளிட்ட ஆறு மாநகராட்சிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 21 ம் தேதியும், நகராட்சிகள், மாவட்டங்கள் மற்றும் தாலுகா பஞ்சாயத்துகளுக்கான தேர்தல்கள் பிப்ரவரி 28 ம் தேதியும் நடைபெற உள்ளது. இந்தநிலையில் வதோதராவில் பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய் ரூபானி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிக் கொண்டிருந்த அவர் மேடையிலேயே மயங்கி விழுந்தார்.
இதை கவனித்த பாதுகாவலர் உடனடியாக வந்து அவரை தாங்கிபிடித்தார்.இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. மேடையிலேயே முதலமைச்சருக்கு முதல் உதவி அளிக்கப்பட்டு, பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். “முதலமைச்சருக்கு கடந்த 2 நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. ஆனால் சனிக்கிழமை ஜாம்நகரிலும், ஞாயிற்றுக்கிழமை வதோதராவிலும் நடைபெற்ற தனது பொதுக் கூட்டங்களை ரத்து செய்வதற்குப் பதிலாக கலந்து கொண்டார். இதனால் ஏற்பட்ட அலைச்சல் காரணமாக முதல்வர் விஜய் ரூபானிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.