டெல்லியில் கொரோனா பரவல் வேகமெடுத்து வருவதால் அனைத்து பள்ளிகளும் காலவரையின்றி மூட அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
நாடுமுழுவதும் கொரோனா பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. தமிழகம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த தொற்றினை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல், இந்திய தலைநகர் டெல்லியில் கொரோனா பரவலில் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு கொரோனவை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
Read more – கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்.. ஒரு பாட்டில் பியரை எடுத்துக்கொள்.. உணவகம் வழங்கிய அதிரடி ஆபர்
இந்தநிலையில், டெல்லி முழுவதும் இயங்கிவரும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் காலவரையின்றி மூட அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும், மறுஉத்தரவு வரும் வரை பள்ளிகள் திறக்கப்படாது எனவும், ஆன்லைன் வாயிலாக மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.