‘குடியரசு தின ஒத்திகைக்காக டெல்லி வந்த வீரர்களுக்கு கொரோனா’ : 150 ராணுவ வீரர்கள் பாதிப்பு

குடியரசு தின அணிவகுப்புக்காக டெல்லிக்குச் சென்ற ராணுவ வீரர்களில் 150 வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி :

ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதி இந்திய குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. பிரதமர், ஜனாதிபதி, வெளிநாடுகளில் சிறப்பு அழைப்பாளர்கள் என்று கலந்துகொள்ளும் குடியரசு தினத்தில் இந்தியாவின் ராணுவம், கப்பற்படை, விமானப்படை என முப்படையினரும் அணிவகுத்து பிரதமருக்கு மரியாதை செலுத்துவார்கள். வரும் குடியரசு தின விழாவிற்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், வரும் குடியரசு தின விழாவையொட்டிய அணிவகுப்புக்கான ஒத்திகைக்கு டெல்லி வந்த ராணுவ வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 150 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும், அறிகுறி இல்லாமல் கொரோனா பாசிட்டிவ் என்ற முடிவு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Read more – திருமணத்திற்காக கட்டாயமாக மத மாற்றம் : 10 ஆண்டுகள் வரை சிறை அமைச்சரவை ஒப்புதல்

இதனையடுத்து கொரோனா உறுதி செய்யப்பட்ட வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மற்ற வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version