கொரோனா தடுப்பூசி ஒத்திகை டிசம்பர் 28, 29 ஆம் தேதிகளில் நடைபெறும் : சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியீடு

கொரோனா தடுப்பூசி ஒத்திகை டிசம்பர் 28,29 ஆம் தேதிகளில் நடைபெறும் என சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Close-up medical syringe with a vaccine.

டெல்லி :

கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடவடிக்கை    டிசம்பர் 28, 29 அன்று அசாம், ஆந்திரா, குஜராத், பஞ்சாப் ஆகிய 4  மாநிலங்களில் நடைபெறுகிறது. 

குடும்ப நலன் மற்றும் சுகாதார அமைச்கம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் :

கொரோனா தடுப்பூசி ஒத்திகை  நடவடிக்கை  ஒவ்வொரு மாநிலத்தின் இரண்டு மாவட்டங்களில் திட்டமிடப்படும். இந்த இரண்டு நாள் செயல்பாடு 2020 டிசம்பர் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் திட்டமிடப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பூசிக்கான குளிர் சேமிப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள், சரியான சமூக இடைவெளியுடன்  கூட்டத்தை நிர்வகித்தல் ஆகியவை இதில் அடங்கும் .கொரோனா தடுப்பூசி போட்டத்தும் ஏற்படக்கூடிய பாதகமான நிகழ்வுகளை நிர்வகிப்பதை மையமாக கொண்டிருக்கும் . கூடுதலாக, நோய் பரவுவதைத் தடுக்க, தடுப்பூசி போடக்கூடிய  இடங்களில்  தொற்று கட்டுப்ப டுத்த தொகுதி மற்றும் மாவட்ட வாரியாக ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா  தடுப்பூசி தொடர்பான சந்தேகங்களைத் தீர்க்க வசதியாக, தேசிய அளவில் 1075 மற்றும் மாநில அளவில் 104 உதவி எண்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.கொரோனா தடுப்பூசிகளை வெளியிடுவதற்கான பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. தடுப்பூசி போடும் பணியில் ஈடுபடுபவர்கள் பல்வேறு மாநிலங்களில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

Read more – 2,500 பேர் எழுதிய 32 மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவால் நீதித்துறை அதிர்ச்சி : தேர்வில் 6 பேர் மட்டுமே தேர்ச்சி

தேசிய அளவிலான பயிற்சியில், மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் 2,360 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். தற்போது வரை, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மாநில அளவிலான பயிற்சிகள் முடிவடைந்துள்ளன. இவற்றில் மாவட்ட அளவில் 7,000க்கும் மேற்பட்டோர் பங்கு பெற்றுள்ளனர். லட்சத்தீவில் இந்த பயிற்சி டிசம்பர் 29ஆம் தேதி நடக்கிறது. 681 மாவட்டங்கள் (49,604 பயிற்சியாளர்கள்) செயல்பாட்டு வழிகாட்டுதல்களில் மருத்துவ அதிகாரிகளின் பயிற்சியை முடித்துள்ளன. 17,831 வட்டாரங்களில் 1399 வட்டாரங்களில், தடுப்பூசி போடும் குழுவினருக்கான பயிற்சிகள் முடிவடைந்துள்ளன. மற்ற வட்டாரங்களில் பயிற்சிகள் நடந்து வருகின்றன.

Exit mobile version