நாளை முதல் கர்நாடகத்தில் பசுவதை தடை சட்டம் அமலுக்கு வருகிறது.
பெங்களூர்:
கர்நாடக அரசு பசுவதை தடை சட்ட மசோதாவை சட்டசபையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவேற்றியது. பலர் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தநிலையில், பசுவதை தடை அவசர சட்டத்தை கர்நாடக அரசு கொண்டு வந்துள்ளது.இதற்கு கவர்னர் வஜூபாய் வாலா ஒப்புதல் வழங்கியுள்ளார்.இந்த நிலையில் இந்த பசுவதை தடை சட்டத்தை நாளை (திங்கட்கிழமை) முதல் அமல்படுத்தப்படும் என்று அரசு கூறியுள்ளது.
Read more – சைக்கிள் மிக்ஸி.. ஜூஸ் குடிப்பது ஈஸி..இன்ஜினியர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு
இந்த சட்டத்தின் அடிப்படையில் மாடுகளை கொலை செய்ய முடியாது. விவசாயிகள் வயது முதிர்ந்த மாடுகளை வளர்க்க முடியாவிட்டால் அவற்றை கோசாலைகளில் அனுமதிக்க வேண்டும். அதனைத்தொடர்ந்து 13 வயதுக்கு மேற்பட்ட எருமை மாடுகளை கொல்ல உரிய முன் அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.மேலும், மாட்டிறைச்சி சாப்பிட தடை இல்லை.இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும்.மேலும், ரூ.50 ஆயிரம் அபராதமும் வசூலிக்கப்படும்.
இந்த பசுவதை தடை சட்டத்திற்கு எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ஜனதா தளம் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
