கேரளாவில் 3 ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கான தேர்தல் : தேதியை வெளியிட்ட இந்திய தேர்தல் ஆணையம்

கேரளாவில் 3 ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

கேரளா :

கேரளாவில் இருந்து நாடாளுமன்ற ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அப்துல் வகாப் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), கே.கே.ராகேஷ் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), வயலார் ரவி (காங்கிரஸ்) போன்ற எம்.பி.களுக்கான பதவி வரும் மாதம் 21 ம் தேதி நிறைவடைகிறது.

இதையடுத்து, இந்த பதவிகளுக்கான தேர்தல் தேதியை இம்மாதம் 30 ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கான அறிக்கையை தேர்தல் ஆணையம் இன்று வெளியிடும் என்வும், ஏப்ரல் 30 ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெற்று அன்று மாலையே தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more – இன்றைய ராசிபலன் 13.04.2021!!!

கேரளாவில் தற்போது காலியாகும் 3 இடங்களுக்கு கடந்த 12 ம் தேதி தேர்தல் நடைபெற இருந்த நிலையில் தேர்தல் ஆணையம் தற்காலிமாக நிறுத்திவைத்து பின்பு கேரளா நீதி மன்றத்தின் உத்தரவால் தேர்தல் தேதியை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version