டெல்லியில் விவசாயிகள் போராட்ட களத்தில் இளைஞர் கொடூர கொலை; கைகள் வெட்டி எடுக்கப்பட்ட நிலையில் பிணத்தை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பு.
டெல்லி,
11 மாதங்களாக டெல்லி-ஹரியானா எல்லை பகுதியான சிங்குவில் விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். பகல் முழுவதும் போராட்டம், இரவில் ஓய்வு என ஒவ்வொரு நாளும் கடந்து செல்லும் நிலையில் இன்றைய விடியல் பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. விவசாயிகள் போராட்டம் நடத்தும் மேடை அருகே இளைஞர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டு போலீசாரின் தடுப்பு வேலிகள் மீது கட்டுப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். நேற்று ( வியாழக்கிழமை ) இரவு இந்த கொடூர சம்பவம் நடந்து இருக்கலாம் என சந்திகிக்கப்படும் கொலையை விடியற்காலை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பார்த்துள்ளனர். இது தொடர்பாக குண்டிலி காவல்துறைக்கு தகவல் கிடைத்தும் அவர்களை உள்ளே வர போராட்டக்காரர்கள் அனுமதிக்கவில்லை! நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் போலீசார் கொலை நடந்த இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது, பேரிகார்டில் கட்டப்பட்ட இளைஞரின் உடலில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருப்பதும் இடது கையை வெட்டி எடுத்து அதையும் பிணத்தின் அருகே கட்டி இருப்பதும் பொலிஸாரால் அறியப்பட்டது. மேலும், பிணத்தை தொங்க விட்ட இடத்தில் இருந்து சுமார் 10 அடி தூரத்திற்கு பிணத்தை இழுத்து வந்த போது உடலில் இருந்து வெளிவந்த ரத்த கறைகள் அந்த இடங்களில் படிந்து இருப்பதாக குண்டிலி காவல்நிலைய பொறுப்பாளர் ரவிக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர் உடலை கைப்பற்றிய போலீசார் பிரதேச பரிசோதனைக்காக உடலை அனுப்பிவைத்தனர். பின்னர், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்; காரணம் கொலைசெய்யப்பட்ட இளைஞர் குரு கிரந்த் சாஹிப்பின் கொலைக்குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்டார் எனவும் நிஹாங்ஸ் கொலை செய்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் விசரணைநடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், விவசாயிகளின் போராட்ட மேடைக்கு அருகே கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிணம் இருந்துள்ளது, இரவில் நடந்து இருந்தாலும் எந்த சத்தமும் கேட்காமல்? எப்படி இருந்து இருக்கும் எனவும் ஒருவேளை வேறு எங்கும் கொலை செய்யப்பட்டு பிரச்சனை எழுப்ப வேண்டும் என்ற கோணத்தில் விவசாயிகள் போராட்டத்தின் பகுதியில் கட்டி சென்றுள்ளனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.