மகாராஷ்டிராவில் வெறும் 5 ரூபாய்க்காக 20 மாத குழந்தையை கொன்றிருக்கிறார் தந்தை ஒருவர்.
மகாராஷ்டிரா மாநிலம் கோந்தியா மாவட்டத்திலுள்ள லொனாரா கிராமத்தைச் சேர்ந்த விவேக் உயிக். இவர் பிப்ரவரி 2ஆம் தேதி வேலைக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பி இருக்கிறார். அப்போது விவேக்கின் மனைவி வர்ஷா, அழுதுகொண்டு இருக்கும் குழந்தைக்கு இனிப்பு வாங்க 5 ரூபாய் கேட்டிருக்கிறார். ஆனால் தன்னிடம் சில்லறை இல்லை என்று விவேக் கூறியிருக்கிறார். ஆனால் குழந்தை தொடர்ந்து அடம்பிடித்து அழுதுகொண்டே இருந்ததால் ஆத்திரமடைந்த விவேக் குழந்தையைத் தூக்கி கதவில் வேகமாக அடித்திருக்கிறார்.
தடுக்கமுயன்ற வர்ஷாவையும் பிடித்து தள்ளிவிட்டு படிக்கெட்டிலும் இழுத்துச் சென்றிருக்கிறார். குழந்தையை விவேக்கிடமிருந்து பறித்த வர்ஷா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார். ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். இதுகுறித்து வர்ஷா, திரோடா காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். வெறும் 5 ரூபாய் இனிப்புக்காக தன்னுடைய 20 மாத பெண் குழந்தை வைஷ்ணவியை கணவர் கொன்றுவிட்டதாத் தெரிவித்து இருக்கிறார். விவேக்கை கைதுசெய்த போலீஸார் சொந்த மகளையே கொன்ற கொலைகுற்றத்திற்காக அவர்மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.