இந்தியாவில் அறிமுகமாகும் 3 வது வகையான கொரோனா தடுப்பூசி…

அவசரகால தேவைக்காக ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்தியா :

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் என்ற 2 வகையான கொரோன தடுப்பூசிகள் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், ஒடிசா, பஞ்சாப், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தகவலும் அவ்வப்போது கிடைத்து வருகிறது.

இந்தநிலையில், தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. அதில் ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை அவசரகால தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையை பரிசீலனை செய்த மருந்து இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

Read more – ஓய்வு பெற்ற சுனில் அரோரா.. புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா..

இதையடுத்து வரும் காலங்களில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்தியாவில் 3 வது தடுப்பூசியாக பயன்பாட்டிற்கு வர இருக்கிறது. இதுவரை கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசியை 10 கோடிக்கு மேற்பட்ட இந்தியர்களுக்கு போடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version