சீனாவில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு அனுமதி மறுப்பு : மத்திய அரசு தகவல்

சீனாவில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்களுக்கு விமானத்தில் அனுமதியளிக்க வேண்டாம் என்று விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி :

புதிய கொரோனா தொற்று பரவல் காரணமாக ஏற்கனவே பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களுக்கு மத்திய அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. வெளிநாட்டினருக்கான தற்போதைய விதிமுறைகளின்படி பயணிக்கத் தகுதியான வெளிநாட்டவர்கள் இரண்டு நாடுகளுக்கு பயணம் செய்து மூன்றாவதாக இந்தியா வந்தடைகின்றனர். தற்போது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்திய மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் சார்பில் சீன நாட்டினரை சார்ந்தவர்கள் யாரும் இந்தியாவிற்கு வர வேண்டாம் என்று கேட்டு கொண்டு, அதே நேரத்தில் சுற்றுலா விசாக்கள தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து வெளிநாட்டவர்கள் தொழில் மற்றும் பிற சுற்றுலா அல்லாத விசாக்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும், இந்தியாவிற்கு வருகை தரும் சீன நாட்டினர் பெரும்பாலும் ஐரோப்பாவில் இருந்து வருகிறார்கள்.

Read more – விவசாயிகள் போராட்டம் : 1,400 செல்போன் கோபுரங்களை சேதப்படுத்திய பஞ்சாப் விவசாயிகள்

இதனால் கொரோனா அச்சத்தின் காரணமாக சீனாவில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்களுக்கு விமானத்தில் அனுமதியளிக்க வேண்டாம் என்று விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version