நாடுமுழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி : விவரங்கள் அறிய “டோல் ப்ரீ ” எண் வெளியீடு

நாடுமுழுவதும் இன்று முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசியை மத்திய அரசு வழங்குகிறது.

புதுடெல்லி:

இந்தியாவில் முன்னுரிமை அடிப்படையில் முதற்கட்டமாக மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், மூத்த குடிமக்கள் என 30 கோடி பேருக்கு இன்று ஜனவரி 16 ம் தேதி கொரோனா தடுப்பூசி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இந்த கோவிட் ஷீல்டு தடுப்பூசிக்கு ஒத்திகை பார்க்கும் விதமாக கடந்த ஜனவரி 2 ம் தேதி நாடுமுழுவதும் 2 மணி நேரம் ஒத்திகை நடைபெற்றது.

இந்தநிலையில், உலகிலேயே மிக பிரமாண்டமான தடுப்பூசி போடும் திட்டம் இந்தியாவில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். முதல் நாளான இன்று நாடெங்கும் உள்ள சுமார் 3 லட்சம் மருத்துவ பணியாளர்கள் தடுப்பூசியை போட்டுக்கொள்ள இருக்கிறார்கள், மேலும் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு ஊசி போடும் நேரம் மற்றும் இடம் மொபைல் போன் மூலமாக ஒரு நாளுக்கு முன்ரே அனுப்பப்பட்டுள்ளது.

Read more – இன்றைய ராசிபலன் 16.01.2021!!!

ஒவ்வொரு தடுப்பூசி மையத்திலும் தினசரி சராசரியாக 100 பேருக்கு ஊசி செலுத்தப்படும் என்றும், மேலும் இவை படிப்படியாக உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி குறித்த மேலும் விவரங்களை பெற 1075 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

Exit mobile version