கொரோனா தடுப்பூசி ஒத்திகையில் வெற்றி : மத்திய அரசு

கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதற்கான ஒத்திகை வெற்றி அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு தயாராகிறது.

டெல்லி :

ஆந்திரா, குஜராத், பஞ்சாப், அசாம் ஆகிய 4 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதற்கான ஒத்திகை கடந்த 2 நாட்களாக நடைபெற்ற ஒத்திகை வெற்றி அடைந்துள்ளது. கொரோனா தடுப்பூசி  போடும் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு  தயாராகிறது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

கொரோனா தடுப்பூசி  ஒத்திகைக்காக தனி குழுக்கள் அமைக்கப்பட்டு  ஒத்திகையில் பங்கேற்க இருப்போரின் விவரங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டன. அவர்களுக்கு செல்போன் மூலம் தடுப்பூசி செலுத்தும் நேரம், இடம் தொடர்பான விவரங்கள் மையங்களுக்கு அவர்கள் வரவழைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் ஒத்திகைகள் நடைபெற்றன.

Read more – பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் குறித்து ஆலோசனை : கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

அந்த மையங்களிலேயே குறிப்பிட்ட 30 நிமிட நேரத்துக்கு அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். அவர்களது தகவல்கள் ‘கோ-வின்’ என்ற மத்திய அரசின் புதிய வலை தளத்தில் சேமித்து வைக்கப்பட்டன. அவர்களை தொடர்ந்து கண்காணிப்பில் வைப்பது தொடர்பாகவும் ஒத்திகை நடத்தப்பட்டது. தடுப்பூசியை குறிப்பிட்ட குளிர்பதன நிலையில் சேமிப்பது, தடுப்பூசி செலுத்தும் மையங்களுக்கு அதை கொண்டு வந்து வினியோகிப்பது உள்ளிட்டவை குறித்தும் ஒத்திகை நடத்தப்பட்டது. தடுப்பூசி ஒத்திகை தொடர்பாக 4 மாநிலங்களும் திருப்தி தெரிவித்தன. தடுப்பூசி செலுத்துவதற்காக பதிவு செய்துகொள்ள ‘கோ-வின்’ என்ற செயலி தளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

Exit mobile version