நாடுமுழுவதும் சிகரெட் குடிப்பவருக்கான வயது வரம்பில் மாற்றம்: புதிய திட்டத்தை அமல் படுத்துகிறது மத்திய அரசு

நாடுமுழுவதும் சிகரெட் குடிப்பவருக்கான வயது வரம்பில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு புதிய திட்டத்தை அமல் படுத்த இருக்கிறது.

புதுடெல்லி :

நாடு முழுவதும் குட்கா,பான் மசாலா, சிகரெட் உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்களின் பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் குட்கா,பான் மசாலா தடைவிதித்த போதிலும் மறைமுகமாக விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

இந்தியாவை தவிர,தமிழகத்தில் சராசரியாக ஒரு மாவட்டத்தில் ஒரு நாளைக்கு 2 லட்சத்தில் இருந்து 5 லட்சம் சிகரெட்டுகள் விற்பனையாகி வருகிறது. அதிலும் 10 ல் 8 பேருக்கு புகை பிடிக்கும் பழக்கம் உடையவர்களாக காணப்படுகிறார்கள். இதனால் ஆண்டுதோறும் பல இளைஞர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மத்திய அரசு சார்பில் விளம்பரங்கள் மற்றும் சிகரெட் அட்டைகளில் புற்றுநோய் பாதித்த புகைப்படங்களை பதிவிட்டாலும் புகைபிடிப்பவரின் எண்ணிக்கை குறைந்த பாடில்லை.

Read more – ஆப்கானிஸ்தானில் அரங்கேறிய கொடூரம் : 7 ராணுவ வீரர்களுக்கு விஷம் வைத்த சக ராணுவ வீரர்

இந்தநிலையில், மத்திய அரசு புகை பிடிக்க கூடிய நபர்களின் குறைந்தபட்ச வயது வரம்பை 18 லிருந்து 21 ஆக உயர்த்த ஒரு புதிய சட்டத்தை அமல் படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த புதிய சட்டமானது விரைவில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version