உருமாறிய புதிய கொரோனா வைரஸ் தொற்றுநோயியல் கண்காணிப்பு நடைமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது.
டெல்லி :
இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய புதிய கொரோனா வைரஸ் தொடர்பாக தொற்றுநோயியல் கண்காணிப்பு மற்றும் எஸ்.ஓ.பி எனப்படும், நடவடிக்கைக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘உருமாறிய புதிய கொரோனா வைரஸ் பரவி வருவதாக, உலக சுகாதார நிறுவனத்துக்கு இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது. இந்தப் புதிய உருமாறிய வைரஸ் அதிவேகமாகப் பரவக் கூடியதாகவும், இளையோரை வெகுவாக பாதிக்கக் கூடியதாகவும் இருக்கும் என நோய்க் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையம் மதிப்பிட்டுள்ளது.
Read more – “என்னை விமர்சிக்க கமல்ஹாசனுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது” : நடிகை குஷ்பு பேட்டி
இந்த உருமாறிய புதிய கொரோனா வைரஸ் 17 மாற்றங்கள் கொண்ட தொகுப்பாக உள்ளது. அதில் குறிப்பிடத்தக்கது, ஸ்பைக் புரதத்தில் உள்ள ‘என்501ஒய்’ மாற்றம். இந்த மாற்றம் வைரஸை மனிதர்களிடையே அதிகமாகவும், மிக எளிதாகவும் பரவச் செய்யலாம். கடந்த 4 வாரங்களில் இங்கிலாந்தில் இருந்தும், இங்கிலாந்து விமான நிலையங்கள் மூலமாக விமானம் மாறியும் வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறிப்பட்டுக் கண்காணிக்கப்படுவதை மாநில அரசுகள் / ஒருங்கிணைந்த நோய்க் கண்காணிப்புத் திட்ட அதிகாரிகள் உறுதி செய்வர். அவர்களும் மருத்துவ நெறிமுறைப்படி சோதனை செய்யப்படுவர். அவர்களுக்குத் தொற்று இருப்பது கண்டறிப்பட்டால் அவர்களும் சிறப்புத் தனிமை மையங்களில் தங்கி சிகிச்சை பெற வேண்டும்’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.