காதலுக்காக பெற்றோர், அண்ணன்கள் உள்ளிட்ட 7 பேரை கொலை செய்த பெண் தூக்கிலிடப்படுகிறார். சுதந்திரத்துக்குப் பின் தூக்கிலிடப்படும் முதல் பெண் குற்றவாளி இவர்.
உத்தபிரதேச மாநிலம் அம்ரோ மாவட்டத்திலுள்ள பாவன்கேடி என்ற இடத்தைச் சேர்ந்த சப்னம், அதே ஊரைச் சேர்ந்த சலீம் என்பவரை காதலித்து வந்தார். எம்.ஏ வரை படித்து விட்டு ஆசிரியையாக பணி புரிந்து வந்த சப்னம். நான்காம் வகுப்பு கூட தாண்டாத சலீமை காதலித்தது சப்னத்தின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. இதைத் தொடர்ந்து , சப்னம் தன் காதலருடன் சேர்ந்து தன் குடும்பத்தையே கொலை செய்ய துணிந்துள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு தன் குடும்பத்தினருக்கு பாலில் மயக்க மருந்து கொடுத்து பின்னர், தன் பெற்றோர், இரண்டு அண்ணன்கள், அவர்களின் இரு மனைவிகள் அண்ணனின் 10 மாத ஆண்குழந்தை ஆகியோரை தன் காதலருடன் சேர்ந்து சப்னம் கொலை செய்தார்.
இந்த வழக்கில் 2010 ஆம் ஆண்டு சப்னம் மற்றும் சலீமுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது.. தற்போது, சலீம் ஆக்ரா சிறையிலும் சப்னம் ராம்பூர் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். மதுரா மாவட்ட நிர்வாகம் சப்னத்தை தூக்கிலிடும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. டெத் வாரன்ட் வழங்கப்பட்டதும் மதுரா சிறைக்கு சப்னா மாற்றப்பட்டு தூக்கிலிடப்படுவார். நிர்பயா கொலையாளிகளை தூக்கிலிட்ட பவான் ஜலாட்தான் சப்னத்தையும் தூக்கில் போடுகிறார். சப்னத்தை தூக்கிலிடப்படும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. சுதந்திரத்துக்கு பிறகு, தூக்கிலிடப்படும் முதல் பெண் சப்னம் என்பது குறிப்பிடத்தக்கது.