இந்தியளவில் ட்ரெண்டாகும் ‘ மோடி ஜாப் டூ ‘ : திணறும் மத்திய பா.ஜ.க

மோடி வேலை கொடுங்கள் என்ற ஹேஷ்டேக் தற்போது இந்தியளவில் ட்ரெண்டாகி வருகிறது.

புதுடெல்லி :

இந்தியாவில் வேலையின்மை அதிகரித்து வரும் வேளையில் ட்விட்டரில் பிரதமர் மோடியிடம் தங்களுக்கு வேலை வேண்டும் என்று ‘ மோடி ஜாப் டூ ‘ பலர் நேரடியாக கோரிக்கை வைத்துள்ளனர். modi_job_do என்ற ஹேஷ்டேக் நேற்று முன்தினம் முதல் தேசிய அளவில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்த ஹேஷ்டாக்கில் 55 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ட்வீட் செய்து வருகின்றனர்.

Read more – தமிழகத்தில் 9,10,11 ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

கொரோனா ஊரடங்கின் போது பலர் வேலை இழந்த நிலையில், இந்தியாவில் வேலையின்மை விகிதம் 47 % அதிகரித்துள்ளது. ஏற்கனவே இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தானில் வேலையின்மை 50 சதவீதமும், இலங்கையில் 51 சதவீதமாகவும் மற்றும் வங்கதேசத்தில் 57 சதவீதமாகவும் காணப்படுகிறது.

கடந்த 2019 ல் பாஜக ஆட்சிக்கு வந்தால் இரண்டு கோடி வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று அளித்த வாக்குறுதி என்ன ஆனது என்று தொடர்ந்து பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Exit mobile version