காதலர் தினத்தன்று மனைவிக்கு ட்ரீட் வைத்த கணவன் கழுத்தை நெரித்து கொலைசெய்துவிட்டு தானும் மணிக்கட்டை அறுத்து தற்கொலை செய்து கொண்டான்.
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்தவர் தேவ்ஜீத் தத்தா, காதலர் தினத்தன்று தனது மனைவி மற்றும் மகனை ஹோட்டலுக்கு அழைத்துச்சென்றார். பிறகு மனைவியின் பெற்றோரைப் பார்க்க கரோல் பாக் வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு மகனை விட்டுவிட்டு கணவனும் மனைவியும் மட்டும் வீட்டிற்கு சென்றிருக்கின்றனர். அடுத்த நாள் காலை தங்கள் காலனியில் ஆளில்லாத வீட்டின்முன்பு தேவ்ஜீத் தனது மணிக்கட்டை அறுத்துக்கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் காவலல்துறைக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர்.
தகவலறிந்து வந்த போலீஸார் இதுகுறித்து தேவ்ஜீத்தின் மனைவியிடம் தெரிவிக்க வீட்டிற்கு சென்றபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வைசாலி இல்லத்தில் தேவ்ஜீத்தின் மனைவி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. மேலும் தேவ்ஜீத் எழுதி வைத்திருந்த தற்கொலை கடிதம் ஒன்றும் போலீஸாருக்கு கிடைத்திருக்கிறது. அதன்படி, தேவ்ஜீத் தனது மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்திருக்கிறது. உயிருக்கு போராடிய நிலையில் தேவ்ஜீத்தை காப்பாற்றிய போலீஸார் அவரை மருத்துவமனையில் அனுமதித்ததுடன், அவர்மீது கொலைகுற்றத்திற்காக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.