தூங்கிக்கொண்டிருந்த கணவன் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவி … அட போங்கப்பா ! இதல்லாம் ஒரு காரணமா ?

மத்திய பிரேதசத்தில் தூங்கிக்கொண்டிருந்த கணவன் மீது மனைவி கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் :

மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் சிவ்குமாரி அஹிர்வார்( வயது – 28) அரவிந்த் அஹிர்வார்(வயது-35) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர் .அரவிந்த் தினக்கூலி தொழிலாளியாக வேலை செய்து வருவதால் தினந்தோறும் வீட்டிற்கு தாமதமாக வந்துள்ளார். அரவிந்த் தினமும் வீட்டிற்கு தாமதமாக வருவதால் அவருக்கும் மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரமும் இதே போல் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், குடும்பத்தில் உள்ளவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி தூங்க வைத்துள்ளனர். தீடிரென அதிகாலை 5 மணிக்கு அர்விந்த் பயங்கரமாக அலறும் சத்தம் கேட்டபோது, அனைவரும் ஓடி வந்து பார்த்துள்ளனர். கோவம் குறையாத சிவ்குமாரி தன் கணவரின் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

Read more – அப்பாவுக்கே ஆப்பு வைத்த விஜய்… அப்போ ரசிகர்கள் கதி அவ்வளவு தான்…!

இதையடுத்து, வலியில் துடித்த அரவிந்தை மருத்துவமனைக்கு அழைத்து சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிவ்குமாரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது, கோபத்தில் என்ன செய்கிறேன் என்று தெரியாமல் இந்த தவறான முடிவை எடுத்து விட்டதாகவும், இதற்கு மிகவும் வருந்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version