தலைப்பொங்கல் கொண்டாட வந்த புது மாப்பிள்ளைக்கு 125 வகையான விருந்து வைத்து மாமியார் அசத்தியுள்ளார்.
கோதாவரி :
மேற்கு கோதாவரி மாவட்டம் பீமவரத்தில் சங்கராந்தி தலைப்பொங்கல் கொண்டாட மாமியார் வீட்டிற்கு வந்த புதுமாப்பிள்ளைக்கு 125 வகையிலான உணவு பரிமாறப்பட்டது. மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த 29 வயது வாலிபருக்கும்,அதே பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த மாதம் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து தலை சங்கராந்தி (பொங்கல்) பண்டிகை தினத்தை முன்னிட்டு புதுமாப்பிள்ளை தனது மனைவியுடன் மாமியார் வீட்டிற்கு விருந்திற்கு சென்றுள்ளார்.
Read more – நடுவானில் 7 வயது சிறுமிக்கு மூச்சு திணறல் : விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட போதிலும் நேர்ந்த சோகம்
விருந்திற்கு வந்திருக்கும் தனது மருமகனுக்கு பல்வேறு வகையிலான உணவை பரிமாற வேண்டும் என்று மாமியார் திட்டமிட்டு அதற்கான பணிகளை பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பே செய்ய ஆரம்பித்துள்ளார். அதன்படி, கேசரி, முறுக்கு, சீடை, அதிரசம் உள்பட பல்வேறு வகையான இனிப்புகள் என 125 வகையிலான உணவை தயாரித்து மருமகனுக்கும், தனது மகளுக்கும் பரிமாறினார்.
இதை பார்த்து வியந்து போன மருமகன் திக்குமுக்காடி எதை சாப்பிடுவது என்று தெரியாமல் முழித்துள்ளார். இதை அருகில் இருந்தபடியே அவரது இளம்மனைவி பார்த்து ரசித்தார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.