பறவைகளையும் தொடரும் மர்ம காய்ச்சல்.. கொத்து கொத்தாய் மடியும் பல உயிர்கள்..

உலகத்தில் மனிதர்களிடையே பரவிய கொரோனா போல, இந்தியாவில் இறந்த காகத்தின் மூலம் பறவைகளிடையே உயிர் பறிக்கும் மர்ம பறவை காய்ச்சல் பரவி வருகிறது.

ராஜஸ்தான்:

உலகம் முழுவதும் கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கும் இந்த வேளையில், இந்தியாவில் பறவைகளிடையே உயிர் பறிக்கும் மர்ம பறவை காய்ச்சல் பரவி வருகிறது. ராஜஸ்தானில் (திங்கட்கிழமை) நேற்றைய நிலவரப்படி , 170 க்கும் மேற்பட்ட பபுதிதாக பறவை இறப்புகள் பதிவாகியுள்ளன, நாட்டின் சில பகுதிகளில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கால்நடை பராமரிப்புத் துறையின் அறிக்கைபடி, ராஜஸ்தான் மாநிலத்தில் இதுவரை 425 க்கும் மேற்பட்ட காகங்கள், ஹெரோன்கள் மற்றும் பிற பறவைகள் இறந்துள்ளன.

ஜலாவாரில், தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்களுக்கான நிறுவனத்திற்கு (என்ஹ்சாட்) அனுப்பப்பட்ட சடல மாதிரிகள் சமீபத்தில் பறவைக் காய்ச்சலை உறுதிப்படுத்தியுள்ளன, அதேசமயம் மற்ற மாவட்டங்களில் உள்ள பறவைகளின் இறப்பு அறிக்கை இன்னும் முழுமையாக வரவில்லை என்று தெரிவித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து அதே பகுதியில் இந்தியாவின் தேசிய பறவையான மயில்களின் பலியின் எண்ணிக்கையும் 52 ஆக உயர்ந்துள்ளது.

Read more – இன்றைய ராசிபலன் 05.01.2021!!!

இதேபோல், கேரளாவை அடுத்த ஆலப்புழா மற்றும் கோட்டயம் பகுதியிலும் ஏகப்பட்ட வளர்ப்பு வாத்துகள் இந்த மர்ம பறவை காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளது. இதையடுத்து, இருந்த வாத்துகளின் மாதிரிகள் போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு,அதில் பறவைக் காய்ச்சல் வைரஸ் என உறுதிப்படுத்தப்பட்டது. இந்தநிலையில் கேரள வனத்துறை சார்பில் உடனடியாக கேரள மாநிலத்தில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ராஜஸ்தான் மற்றும் கேரளாவை தொடர்ந்து தற்போது மத்திய பிரேதசத்திலும் மர்ம பறவை காய்ச்சல் பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த காய்ச்சலானது பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்கும் பரவுமா என்ற அச்சமும் ஏற்பட்டு வருகிறது.

Exit mobile version