மேற்கு வங்காளத்தில் நடந்த அதிசயம் : சிறுத்தையுடன் வெற்றுக்கரங்களுடன் சண்டையிட்ட பெண்

மேற்கு வங்காளத்தில் சிறுத்தையுடன் வெற்றுக்கரங்களுடன் சண்டையிட்ட வீரப்பெண் பற்றி செய்தி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மேற்கு வங்காளம் :

மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள தேயிலை தோட்டம் ஒன்றில் லீலா ஓரான் என்ற பெண் பணிக்கு சென்றிருந்தார். அப்பொழுது அங்கு எதிர்பாராதவிதமாக சிறுத்தை ஒன்று திடீரென பின்னால் இருந்து தாக்க முற்பட்டது.

ஆயுதமின்றி நிராயுதபாணியாக நின்ற லீலா ஓரான் வெற்றுக்கரங்களுடன் சிறுத்தையுடன் சண்டை போட ஆரம்பித்து சுமார் 10 நிமிட உயிருக்காக கடினமாக போராடியுள்ளார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு சிறுத்தை அந்த பெண்ணை தாக்குவதை நிறுத்திவிட்டு காட்டிற்குள் ஓடி மறைந்தது.

Read more – தனியார் சந்தையில் கோவிட்ஷீல்டு தடுப்பூசி ஆயிரத்திற்கு விற்பனை : புனே மருந்து நிறுவனம் அறிவிப்பு

சிறுத்தையின் தாக்குதலால் பெரிதும் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை அங்கு வேலைபார்த்த மற்ற தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அவசரமாக பக்கத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதியுள்ளனர். மேலும் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் தெரிவிக்கையில், அந்த பெண்மணியின் பலம் வியக்கத்தக்கது என்றும், அவர் நல்ல ஆரோக்கியத்துடன் சிகிச்சை பெறுகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version