உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே சென்ற விமானம் உடனடியாக தரையிறக்கம் : காரணம் என்ன?

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே சென்ற விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உடனடியாக தரையிறக்கப்பட்டது.

கொல்கத்தா :

கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே ஹைதராபாத் செல்ல விமானத்தில் பயணம் மேற்கொண்டார். விமானம் கிளம்பி சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் உடனடியாக அதை கண்டறியப்பட்டு கொல்கத்தா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

Read more – சையத் முஸ்தாக் அலி டி-20 போட்டி : தமிழ்நாடு அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டன்

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த தொழில்நுட்ப கோளாறை கண்டறியப்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் மிக பெரிய ஆபத்தில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே உயிர் தப்பினார். இதுகுறித்து கொல்கத்தா விமான நிலைய இயக்குநர் தெரிவித்தபோது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக இத்தகைய அவசர நிலை ஏற்பட்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே சென்ற விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது. இனிமேல் இதுபோல் தொழில்நுட்ப கோளாறு நடக்காமல் தவிர்க்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Exit mobile version