எவரெஸ்ட்டில் கொட்டப்படும் உயிர்காக்கும் பொருட்களை கலைப்பொருட்களாக மாற்ற மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.
எவரெஸ்ட் :
எவரெஸ்ட்டில் ஆண்டுதோறும் பல சாகச வீரர்கள் சாகசங்களை மேற்கொள்ள பயணித்து வருகின்றனர். இந்தியா மற்றும் பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த பல சாகச வீரர்கள் எவரெஸ்ட்டில் ஒரு முறையாவது கால்பதிக்க முயற்சி செய்யும் நிலையில், மலையேறுபவர்கள் ஆக்சிஜன் சிலிண்டர், பேட்டரிகள், பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களை பயன்படுத்திவிட்டு அங்கையே தூக்கி எரிந்து விடுகின்றனர்.
Read more – ஏழு மாதங்களில் 5 செ.மீ வளர்ந்த இளைஞர் : வளரவேண்டும் என்று ஆசைப்பட்டதால் எடுத்த முயற்சி
இதனால் அங்கு கொட்டப்படும் குப்பை மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை ஒன்று சேர்த்து, கலைப்பொருட்களாக மாற்ற மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது. மேலும், இதனால் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், எவரெஸ்ட்டில் மாசு ஏற்படுவதை தவிர்க்கவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.