இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினசரி 4 லட்சத்தை நெருங்கி வருவதால் மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் இன்று அவசர ஆலோசனை நடத்த இருக்கிறார்.
நாடுமுழுவதும் கொரோனா தொற்றின் வேகம் சுனாமியை சுழன்று அடித்து வருகிறது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கி மோசமான நிலைமைக்கு உள்ளாகி வருகிறது. மேலும், பல மாநிலங்களில் உயிரிழப்பு அதிகமாகி வருவதால் சடலங்களை எரிக்க முடியாமலும், அடக்கம் செய்யாமல் முடியாமல் நாடே திணறி கொண்டு உள்ளது.
இந்தநிலையில், கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்த இருக்கிறார். மேலும், ராணுவ தளபதி நரவனேயுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தியதில் கொரோனா கட்டுப்பாட்டு பணிகளுக்கு ராணுவம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து கேட்டறிந்தார்.
Read more – இந்தியாவை கொரோனா தொற்றில் இருந்து மீட்போம்… ரூ. 1 கோடியை நன்கொடையாக அளித்த சச்சின்..
மேலும், உலகம் முழுவதில் இருந்து இந்தியாவிற்கு மருத்துவ உதவிகள் வந்து கொண்டு இருக்கிறது. இதன் மூலம் கொரோனாவை வென்றெடுப்பதற்கான வழிமுறைகளை மாநிலங்களுக்கும், சுகாதாரத் துறைக்கும் அறிவித்து வருவதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.