தனியார் சந்தையில் கோவிட்ஷீல்டு தடுப்பூசி ஆயிரத்திற்கு விற்பனை : புனே மருந்து நிறுவனம் அறிவிப்பு

இந்தியாவில் தேவையான அனுமதி கிடைத்ததும் தனியார் சந்தையில் கோவிட்ஷீல்டு தடுப்பூசி ரூ.1000 திற்கு விற்பனை செய்யப்படும் என்று புனே மருந்து நிறுவனம் அறிவித்துள்ளது.

புனே:

இந்தியாவில் வருகின்ற 16 ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடவுள்ள நிலையில், முதலில் முதற்கட்டமாக மருத்துவர்கள், நர்சுகள், முன்கள பணியாளர்கள் என 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட இருக்கிறது.

இதுகுறித்து, இந்திய சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதர் பூனவாலா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

தடுப்பூசியை சாதாரண மனிதர்களுக்கு, பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு கொண்டு போய்ச்சேர்ப்பதில்தான் உண்மையான சவால்கள் நிரம்பி உள்ளது. காலை இந்திய சீரம் நிறுவன வளாகத்தில் இருந்து தடுப்பூசி ஏற்றுக்கொண்ட லாரிகள் (நேற்று) வெளியேறி சென்று தற்போது தடுப்பூசி நாடுமுழுவதும் வினியோகிக்கப்படுகிறது.

Read more – இணையத்தில் உருவான காதல்.. பிறந்த நாளுக்காக விமானத்தில் பறந்த இளைஞர்.. நேரில் சென்று பார்த்தபோது அதிர்ச்சி

ஒரு வருடத்திற்குள்ளாக இந்த தடுப்பூசியை உருவாக்குவதற்கு மிகப்பெரிய முயற்சிகளை எடுத்த விஞ்ஞானிகள், நிபுணர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் பெருமை மிக்க வரலாற்று தருணம் ஆகும்.

பிரதமரின் செயல்திட்டத்துக்கு ஆதரவு அளிப்பதற்காகவும், இந்த நாட்டின் சாமானிய மக்களுக்கு ஆதரவு அளிப்பதற்காகவும்தான் நாங்கள் மத்திய அரசுக்கு ரூ.200 என்ற சிறப்பு விலையில் வழங்குகிறோம். மேலும், இந்தியாவில் தேவையான அனுமதி கிடைத்ததும் தனியார் சந்தையில் கோவிட்ஷீல்டு தடுப்பூசி ரூ.1000 திற்கு விற்பனை செய்யப்படும் என்றும் இந்தியாவை தவிர பிற நாடுகளுக்கும் வழங்க முயற்சிகள் செய்து கொண்டு வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version