கொரோனாவிற்கு காரணம் சீனா அல்ல. நாங்கள் தான் என்று நரபலி தம்பதியினரின் வாக்குமூலம் அளித்தது ஆந்திர போலீசை கலங்க செய்துள்ளது.
சித்தூர் :
சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி சிவநகரில் வசித்து வருபவர் புருஷோத்தம் நாயுடு – பத்மஜா தம்பதியினர் அதீத மூட நம்பிக்கை காரணமாக தாங்கள் பெற்ற இருமகள்களை கடந்த ஞாயிற்று கிழமை அன்று நரபலி கொடுத்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், அந்த தம்பதியினரிடம் ஆந்திர போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பத்மஜாவுக்கு வலிப்பு நோய் இருந்ததாகவும் இதுபோன்று மகள்ளை நரபலி கொடுத்தால் ஆயுள் கூடும் என்றும் கூறி இந்த படுபாதக செயலில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் தனது இருமகள்களும் எழுந்து வந்துவிடுவார்கள் என்றும் அவர்கள் கூறி வந்துள்ளனர்.
தற்போது, பத்மஜாவிடம் தனியாக விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணாக உளறியுள்ளார்.அதில், போலீசாரை பார்த்து கூச்சலிட்ட பத்மஜா, நானே சிவன். சீனாவில் இருந்து வரவில்லை. என்னுடைய உடல் பாகத்தில் இருந்தே கொரோனா வைரஸ் வந்தது. வரும் மார்ச்சிலிருந்து கொரோனா போய்விடும். தடுப்பூசி எல்லாம் வேண்டாம் என்று கூறி சத்தமிட்டுள்ளார். அப்பொழுது அவரை தடுக்க வந்த புருஷோத்தமனை பார்த்து தற்போது நீ என் கணவன் இல்லை. நான் சிவன் என்று மிரட்டியுள்ளார்.
மறுபுறம் பொறுமையாக பதிலளித்த புருஷோத்தம், நான் ஒன்றும் முட்டாள் இல்லை. பிஹெச்டி முடித்தவன். எங்களுக்கு தகவல் வந்தது. அதன்படி நாங்கள் செய்தோம். எனக் கூறியுள்ளார். உயிரிழந்த இரு மகள்களும் உயிர் எழுவதற்குள் நீங்கள் எங்களை தடுத்துவிட்டிர்கள் என்று பதிலளித்துள்ளார். படித்த, கல்வி அறிவு பெற்ற ஒரு குடும்பமே அதீத மூடநம்பிக்கையில் மூழ்கி உள்ளதால் போலீசார் குழம்பிப்போய் உள்ளனர்.