குஜராத் உள்ளாட்சி தேர்தலில் ஆளும் பா.ஜ.கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
குஜராத் :
குஜராத் உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் முடிவற்ற நிலையில் நேற்று அதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மொத்தமுள்ள 31 மாவட்ட பஞ்சாயத்து மற்றும் 81 நகராட்சிகளில் நடந்த தேர்தலில் 70 ல் வெற்றி பெற்று பா.ஜ.க சிறந்த வெற்றியை பதிவு செய்துள்ளது.
அதேபோல், 231 தாலுகா பஞ்சாயத்துகளில் 196 இடங்களை பா.ஜ.க கைப்பற்றி முதல் இடத்தையும், எதிர் கட்சியான காங்கிரஸ் 4 நகராட்சி மற்றும் 33 தாலுகா பஞ்சாயத்துகளையும் வெற்றி பெற்று 2 வது இடத்தையும் பெற்றுள்ளது.
Read more – புதுச்சேரி முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறார் தமிழிசை – நாராயணசாமி குற்றசாட்டு
மொத்த அடிப்படையிலான நகராட்சி, பஞ்சாயத்து, மாவட்ட பஞ்சாயத்து என நடந்த மூன்று உள்ளாட்சி அமைப்புகள் முறையே 8,470 இடங்களில் ஆளும் பா.ஜ.க 6, 236 இடங்களையும், காங்கிரஸ் 805 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.