இரண்டாம் கட்ட தேர்தலை சந்திக்கும் மேற்கு வங்கம், அசாம் : பரபரப்பான சூழ்நிலையில் இன்று வாக்குப்பதிவு

மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான 2 ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

நந்திகிராம் :

மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் கடந்த மாதம் 27 ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில், அதன் தொடர்ச்சியாக இன்று 2 ம் கட்ட தேர்தல் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. மேற்கு வங்கத்தில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜீ களமிறங்கும் நந்திகிராம் தொகுதியும் இடம்பெற்றுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அவருக்கு கடும் போட்டியாக பா.ஜனதா சார்பில் சுவந்த் அதிகாரி போட்டியிடுகிறார்.

மேற்குவங்கத்தில் இன்றும் மொத்தம் 30 தொகுதிகளில் தேர்தல் நடைபெறும் நிலையில், 19 பெண்கள் உள்பட 171 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதேபோல், மற்றொரு முக்கிய மாநிலமாக கருதப்படும் அசாமில் இன்று 2 ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. அசாம் மாநிலத்தில் 39 தொகுதிகளில் 26 பெண்கள் உள்பட 345 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

Read more – உதடு சேவை மேட்டரில் வானதியை வார்த்தைகளால் வறுத்து தள்ளிய மொமெண்ட்… கமல் நச் ட்வீட்

இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவானது மாலை 6 மணிவரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கடந்த 27 ம் தேதி மேற்கு வங்கத்தில் முதற்கட்ட தேர்தல் நடைபெற்றபோது ஒரு வாக்குசாவடி மையத்திற்கு அருகில் குண்டுவெடித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் அதிகளவில் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version