கோவிட்ஷீல்டூ தடுப்பூசியின் விலையை சீரம் நிறுவனம் குறைத்துள்ளது.
வருகின்ற மே 1 ம் தேதி முதல் நாடுமுழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம் என்றும், அதற்கான மருந்துகளை மாநில அரசுகள் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தது. சீரம் நிறுவனம் மத்திய அரசுக்கு 150 ரூபாய்க்கு வழங்கவும் வேளையில், மாநிலங்களுக்கு 400 ரூபாயும், தனியாருக்கு 600 ரூபாய்க்கும் விற்பனை செய்தது.
இந்தநிலையில் இந்த தடுப்பூசி விலை அதிகமாக இருப்பதாக கேரளா முதல் பல மாநிலங்கள் வரை பலரும் விலையை குறைக்க சொல்லி கோரிக்கை வைத்தனர். இதையடுத்து தற்போது மாநில அரசுகளுக்கு மட்டும் சீரம் நிறுவனம் 25 சதவீதத்தை குறைப்பதாக தெரிவித்துள்ளது.
Read more – பெங்களூரில் கொரோனா பாதித்த 3 ஆயிரம் தலைமறைவு : அச்சத்தில் பொதுமக்கள்
மேலும், கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை 400 ரூபாயில் 100 ரூபாய் குறைக்கப்பட்டு 300 ரூபாய் என குறைக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் மருத்துவமனைக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையில் எந்தவொரு மாற்றமில்லை என்று தெரிவித்த நிறுவனம் இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வரும் என்றும் தெரிவித்தது.