வடகிழக்கு மாநிலங்களில் அமலானது முழு ஊரடங்கு; கடைகள்,அரசு அலுவலகங்கள் இயங்க கட்டுப்பாடுகள் விதிப்பு!

இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கத்தொடங்கியுள்ளதால் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கினை அமல்படுத்தி சிக்கிம் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் அமலானது முழு ஊரடங்கு; கடைகள்,அரசு அலுவலகங்கள் இயங்க கட்டுப்பாடுகள் விதிப்பு!

இந்தியாவில் டெல்லி,மும்பை, சென்னை, பெங்களுரு, கேரளா போன்ற முக்கியமான மாநிலத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் காணப்பட்டு வந்தது. ஆனால் வடகிழக்கு மாநிலங்களில் பாதிப்பின் எண்ணிக்கை என்பது சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. ஆனால் அதற்கு மாறாக தற்போது பாதிப்பின் எண்ணிக்கை கணிசமாக உயரத்தொடங்கியுள்ளது.

எனவே இதனை சமாளிக்கும் வகையில் அம்மாநில அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கையாள ஆரம்பித்துவிட்டது. அதன் ஒரு பகுதியாக சிக்கிமில் ஜூலை 27 ஆம் தேதி வரை முழு ஊரடங்கினை அமல்படுத்தப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

மேலும் இந்த ஊரடங்கு காலக்கட்டத்தில் காலை 6 மணி முதல் ஜூலை 27 காலை 6 மணி வரை முழுமையான ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும் அரசாங்க அலுவலகங்கள், கடைகள், வணிக நிறுவனங்கள், சந்தைகள் மற்றும் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதோடு பொது கூட்டங்கள், பயணிகள் வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்படுவதோடு, கல்வி நிலையங்கள்  மற்றும் பயிற்சி நிறுவனங்கள் அனைத்தும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை மூடப்படும் என்றும் மாநில அரசு அறிவித்துள்ளது.

இதே போன்று மணிப்பூர் மாநிலத்திலும் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version