அங்கன்வாடி மையங்கள் திறப்பது எப்போது ? மாநில அரசுகள் அறிக்கை சமர்ப்பிக்க உச்ச நீதிமன்றம் கெடு

அங்கன்வாடி மையங்கள் திறப்பது குறித்து ஜனவரி 31 ம் தேதிக்குள் தகவல் தெரிவிக்கும் படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி:

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டது. மத்திய அரசின் கொரோனா தளர்வுகளின் அடிப்படையில் மாநில அரசுகள் படிப்படியாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறந்து வருகின்றனர். இந்தநிலையில் அங்கன்வாடிகளை திறக்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று உச்ச நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

Read more – 10 மற்றும் 12 ம் வகுப்பை தொடர்ந்து மற்ற வகுப்புகளுக்கும் விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

நாடுமுழுவதும் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் அங்கன்வாடி மையங்களைத் திறப்பது குறித்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஜனவரி 31 ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு அளித்தது.

மேலும், ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்குவதற்கு மாநிலங்களும் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Exit mobile version