அரசு மருத்துவர்களுக்கு இந்த ஆண்டு 50 சதவீத இட ஒதுக்கீடு இல்லை:உச்ச நீதிமன்றம் அதிரடி

அரசு மருத்துவர்களின் மேற்படிப்பிற்க்கான 50 சதவீத இட ஒதுக்கீடு இந்த ஆண்டு இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புதுடெல்லி:

சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழக அரசின் அரசாணையை சென்னை உயர் நீதி மன்றம் ஏற்கனவே உறுதி செய்து இருந்தது.ஆனால் இந்த உத்தரவுக்கு எதிராக உத்தரபிரதேசம், கர்நாடகம்,ஒடிசா மற்றும் தமிழக மாநிலங்களைச் சேர்ந்த 13 மருத்துவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்யப்பட்டது.

இந்த மனுவிற்கு எதிராக தமிழக அரசு சார்பில், முதுகலை படிப்பில் அரசு டாக்டர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள 50 சதவீத இட ஒதுக்கீடு அனைத்து பிரிவினருக்கும் சமமானது, குறிப்பிட்ட பிரிவினருக்கானது இல்லை என்றும், இந்த விவகாரம் தமிழக அரசின் கொள்கை முடிவை சார்ந்தது என்று விளக்கமளித்தது.மேலும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பின்படி இந்த 50 சதவீத இடங்கள் அரசு டாக்டர்களுக்கு ஒதுக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.

இதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு குழு,இன்று தீர்ப்பு ஒன்றினை வழங்கியது.அதன் படி,மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இந்த ஆண்டு இல்லை.இந்த உத்தரவின் அடிப்படையில் 25 கல்லூரிகளில் 584 இடங்கள் ஒதுக்கீடு இந்த ஆண்டு வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version