உத்திரபிரதேசத்தில் தற்போதைய சூழலில் பொதுமுடக்கம் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாடுமுழுவதும் கொரோனா பரவல் கடும் வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவில் நேற்று ஒரேநாளில் மட்டும் 2 லட்சத்திற்கு மேற்பட்டோர் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டு 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் உத்திரபிரதேச மாநிலம் லக்னோ, கான்பூர், வாரணாசி, அலகாபாத் போன்ற நகரங்களில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டாம் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அம்மாநில அரசு உச்ச நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தது.
Read more – இன்றைய ராசிபலன் 21.04.2021!!!
இதையடுத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உத்திரபிரதேசத்தில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டால் மிகப்பெரிய சிக்கல் ஏற்படும் என்றும், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாநில அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதித்து உத்தரவிட்டது.